ஈழத்தவனின் துயரங்களில் பங்கெடுக்காமல் இருப்பவன் தமிழன் என்று சொல்லாதீங்க...
அவன் எந்த பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி... எந்த பெரிய ”தல”யாக இருந்தாலும் சரி.... அவன் தமிழனாக இருக்க தகுதியற்றவன்.நடிகர்களான அஜித்தும், அர்ஜனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இவங்களின் படங்களை உலக நாடுகளில் ஓடும் போது யாரு இந்தப் படத்தை பார்க்கிறான்? ஒரு வெளி நாட்டுக்காரன் பார்க்கமாட்டான் ஒரு தமிழன் தானே பார்க்கிறான் அது யாராக இருக்குமென்று பார்க்தால் அது நம்மட நாட்டுக்காரனாகதான் இருக்கும் நம்மட நாட்டுக்காரன்ட பணம் தேவை ஆனால் நமக்காக குரல் கொடுக்க மாட்டானுகள் பாவிகள் நீங்கள் தின்னுற சோறு யாருட காசிறா?? இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளனர். இன்று முதல் அஜித்,அர்ஜூன் திரைப்படங்களை நாம் புறக்கணிப்போம். எமது மக்கள் படும் இன்னல்களையும் துன்பங்களையும் அவர்கள் அலட்சிய படுத்தி உண்ணா நிலை போராட்டமெல்லாம் எதற்காக என்று கூறியுள்ளார்கள். இப்படி பட்டவர்களுக்கு நாம் இனியும் ஆதரவு வளங்க கூடாது.இவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் இருந்து அடித்தும் உதைத்தும் கலைக்கப்படவேண்டும். அஜித்தா இப்படி என்று புலம் பெயர் தமிழர்கள் அதிச்சியில் உள்ளார்கள். அஜித் உடனே மன்னிப்பு கேக்கவேனும். அர்ஜுனும்தான் இல்லையேல் உங்கள் படங்கள் ஐரோப்பாவில் இனி ஓடாது .. தமிழர்கள் தன்மானம் தேசிய உணர்வு கொண்டவர்களாக ஆழமாக சிந்திப்பவர்களாக மாறும் காலம் இது!